தமிழ் ஓசை
தமிழ் ஓசை

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 147

டெங்குக் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாளொன்றில் 5 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் 25 இற்கும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டெங்கு நோய் பரவல் தொடர்பாக பெற்றோரை அதிகம் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.