தமிழ் ஓசை
தமிழ் ஓசை

டீசல் என்று சொல்லி தண்ணீர் மோசடி

0 71

பண்டாரகம பகுதியில் டீசல் என்ற பெயரில் தண்ணீர் கொள்கலன்களை விற்று ஒருவர் மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த இருவரை அணுகி இரகசியமாக பதுக்கி வைத்திருந்த எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்புகிறீர்களா என கேட்கவும் பல நாட்களாக ஓய்வின்றி வரிசையில் நின்றிருந்ததால், குறித்த எரிபொருளை கொள்வனவு செய்ய அவர்கள் சம்மதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சந்தேக நபரிடம் 2 டீசல் கொள்கலன்களை 24,000  ரூபாவுக்கு வாங்கியுள்ளனர்.

பின்னர் ஒருவரின் டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொள்கலன்களை விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மற்றைய டீசல் கொள்கலனையும் பரிசோதித்ததில், அனைத்தும் டீசல் அல்ல தண்ணீர் என்று அடையாளம் கண்டனர். தங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களால் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சந்தேக நபர் சிறிய லொறியில் இளநீர் விற்பனை செய்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.