Developed by - Tamilosai
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் தந்தையான இயக்குனர் டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து சிம்புவும் வெளியிட்ட அறிக்கையில், திடீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிம்பு தனது தந்தை டி ராஜேந்தரின் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அமெரிக்கா செல்கிறார். அதற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்து சமீபத்தில் விசா அனுமதி பெற்றுள்ளார்.
டி.ராஜேந்தர் அமெரிக்காவில் இறங்கியவுடன் அவருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும் சிம்பு இப்போது அப்பாவை விட சற்று முன்னதாகவே அமெரிக்கா சென்றுவிட்டார்.
டி. ராஜேந்தர் ஜூன் 14 ஆம் தேதி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறார், மேலும் அவர் குணமடைந்த பிறகு மீண்டும் சென்னை திரும்புவார்.
இதனால் டி. ராஜேந்தர் நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.