Developed by - Tamilosai
தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலுள்ள பாதுகாப்புத் தளங்களைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரியா வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புக்கள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட பகுதிகளில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவிற்கான ஆயுதக் கிடங்குகள் மற்றும் சிரியா இராணுவம் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் முகாம்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.