தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஞானசார தேரருக்கு மடுவில் என்ன வேலை? செல்வம் எம்.பி.கேள்வி

0 392

திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், மடு தேவாலயக் காணிப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின்  அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

மடு தேவாலயத்துக்கும் அங்குள்ள 27 குடும்பங்களுக்கும் விவசாயக் காணி தொடர்பில் பிணக்குள்ளது.

இந்நிலையில்  விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் காணி எனவும் மடு தேவாலயத்துக்கு 5 ஏக்கர் காணி எனவும் பிணக்கிற்கு தற்காலிக தீர்வு  காணப்பட்டுள்ளது.

இந்தப் பிணக்கு காணப்பட்ட போது ஞானசார தேரர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு வந்த  பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தேவையற்ற தலையீடுகளை  செய்துள்ளார்.

அவருக்கு அங்கு என்ன வேலை? திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டிய ஞானசார தேரர், மடு தேவாலய காணிப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன்? 


இவ்வாறு திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டிய ஞானசார தேரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.