Developed by - Tamilosai
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்படி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன்.
அதேபோன்று விஜித ஹேரத்துக்கும் நான் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தேன். கலந்துரையாடலில் கலந்துகொள்வதாகவே இருவரும் என்னிடம் கூறினார்கள். ஆனால், ஜே.வி.பி. சார்பாக எவரும் கலந்துகொள்ளவில்லை. இதையிட்டு நான் கவலையடைகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.