Developed by - Tamilosai
ஜெனிவா மாநாட்டில் நீதி கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் அதில் கலந்து கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையுடன் நட்புறவுடன் செயல்படும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பெசலட் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார்.அந்த அறிக்கை தொடர்பாக மார்ச் 03 அன்று விவாதிக்கப்படும். ஜெனீவா மாநாட்டில் நீதி கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் தான் நாம் கலந்து கொள்கிறோம்.
இலங்கையுடன் நட்புறவுடன் செயல்படும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். அந்த பாணியில் வேலை செய்வதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறோம். 49வது அமர்விற்கு நான் இந்த விடயத்தை தான் முன்வைக்க எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன தலைமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.