தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை இரத்துச் செய்யப்படாது- ஜீ.எல்.பீரிஸ்

0 150

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக முழுமையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த நிபந்தனைகள் சம்பந்தமாக அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி.பிளஸ் என்பது நன்கொடையல்ல. அது ஒரு உடன்படிக்கை.

ஜீ.எஸ்.பி.பிளஸ் இரத்துச் செய்யப்பட்டால், அதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது. நாட்டின் வறிய மக்களுக்கே நஷ்டம் ஏற்படும். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் மிகப் பெரிய நிவாரணம்.

இந்த வரிச் சலுகையின் ஊடாக மீன் உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை நீக்குவது சாதாரணமாக கொள்கையல்ல. அந்த வரிச் சலுகை இரத்துச் செய்யப்பட மாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது.

இது சம்பந்தமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜீ.எஸ்.பி.பிளஸ் சம்பந்தப்பட்ட சகல தகவல்களும் பிரசல்ஸூக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டுக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். முதலீடுகளை வரவழைக்க ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். சுற்றுலாத்துறை அமைச்சரும் நானும் அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து தூதுவர்களையும் சந்தித்து பேசவுள்ளோம்.

சுற்றுலாத்துறை முன்னேற்ற விசேட முக்கியத்துவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளோம். புதிய விதத்திலான சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டுக்கு வருகின்றனர்.

எந்த பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையவில்லை. ஏற்றுமதிக்கான பெறுமதி சேர்க்கப்பட்டதை இதற்கு காரணமாக அமைந்தது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.