Developed by - Tamilosai
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நாட்டின் நாரா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிட்டா தெரிவித்திருந்தார். ஜப்பான் நாட்டின் மேலவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஷின்சோ அபே சுடப்பட்டார். அவர் உடனடியாக ஹெலிகாப்படர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரடைப்பு ஏற்பட்டு நினைவற்ற நிலையில் உள்ளதாக முதற்கட்ட மருத்துவமனை தகவல்கள் கூறியிருந்தன.
ஷின்சோ அபேவை தூப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவை தலைமை செயலாளர் ஹிரோகசு மத்சுனோ தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டெட்சுயா யமகாமி எனவும் அவருக்கு வயது 41 எனவும் ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்ட நபர் அந்நாட்டின் கடற்படையில் பணியாற்றியுள்ளார்.