Developed by - Tamilosai
ஜப்பான் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 230 இற்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 465 இடங்களில் 276 இடங்களை லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது
64 வயதுடைய புமியோ கிஷிடா ஒரு மாதத்திற்கு முன்னர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஜப்பானிய அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய லிபரல் டெமாக்ரடிக் கட்சி அரசாங்கம் கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
இதனையடுத்து யோஷிஹிட் சுகா செப்ரெம்பர் மாதம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து புமியோ கிஷிடா புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு இது ஒரு பெரிய வெற்றி எனக் கூறப்படுகின்றது.