தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

0 469

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

புகுஷிமாவில் 2011-ம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அணு உலை கடுமையாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.