Developed by - Tamilosai
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து ஜப்பானில் பணியாற்றும் இலங்கை வாலிபர் ஒருவர் தனி ஆளாக ஜப்பான் நாடாளுமன்றம் முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் பணியாற்றும் நிசாந்த ஜயதிலக்க எனும் வாலிபர் சுமார் 6000 கிலோமீற்றர் பயணம் செய்து டோக்கியோவுக்கு வருகை தந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.