தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜப்பானில் இருந்து ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

0 18

கொழும்பு, கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் இவர்கள் களனி நதி விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.