Developed by - Tamilosai
ஜனாதிபதி செயலகத்தின் பெயர்ப்பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி செயலாளர் சாந்தனி விஜயவர்தனவினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.