Developed by - Tamilosai
அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டிலுள்ள மக்களுக்கு புதிய ஆலோசனை ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் சுமார் 350,000 வேலை வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டால் ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களை ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உணவு ஏற்பாடு செய்தல் மற்றும் முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் உண்டு எனவும் இந்த துறைகளில் பணியாற்றுவதற்கு ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊடாக ஜப்பான் மொழி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.