Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்த போதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை – விஜேதாச ராஜபக்ஷ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், மாணவர்கள் பாடசாலை சென்று பரீட்சை எழுதக்கூடிய சூழல் தற்போது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
மேலும் வினாத்தாள்களை அச்சிடுவதற்குரிய பொருட்கள், எரிவாயு விநியோகம், எரிபொருள் விநியோகம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சட்டமா அதிபர் அரச உறுப்பினர்களுக்கு பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ , அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வரப்போவதாகவும் எச்சரித்தார்.