தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன?- நாமல் ராஜபக்ஷ

0 455

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயகத்தின் கோட்பாடுகளை மீறி அரசாங்கங்களை மாற்ற முடியாது என  அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

“இன்று கோட்டா வீட்டுக்குப் போ என்று சொல்வீர்கள். ஆனால் நாளை அவர் பதவி விலகினால் என்ன திட்டம்? யார் வழிநடத்துவார்கள்?” என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் அடுத்து வருபவரும் இதே பிரச்சினைகளையே எதிர்கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அனைவரும் இணைந்து மக்களின் கோபத்தை தணிக்க முதலில் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.