தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்போம்

0 454
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
சரியான இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் கைப்பொம்மை இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கவிரும்பவில்லை- நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிய அதிகாரங்கள் எதிர்கட்சி தலைவருக்கு அவசியம் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை நிறைவேற்றுவதற்கு அவருக்கு நிபுணர்களின் உரிய ஆதரவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாங்கள் ஜனாதிபதியை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்கவில்லை-ராஜபக்சாக்கள் இல்லாத அரசாங்கத்தை அமைப்பதே எங்கள் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சாக்களை தவிர வேறு எவரும் தலைமைதாங்கும் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சாக்கள் பதவி விலகவேண்டும் அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான மக்கள் ஆணையை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave A Reply

Your email address will not be published.