Developed by - Tamilosai
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியிட்டு சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனைகள் உருவானது என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.