Developed by - Tamilosai
எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினா்கள் சபையில் முகக்கவசம் அணிவதில்லை, கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்ற சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியதால் சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்துக்கு பதில் வழங்கி ஹர்ஷன ராஜகருணா எம்.பி.
“ஜனாதிபதியின் இரண்டாவது பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் விசேட நிகழ்வுகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிக்வில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கெலந்துகொண்டிருந்தாா்கள். அதன்போது கொரோனோ தொற்றுப்பரவல் ஏற்படாதா? எதிர்த் தரப்பினால் ஏற்பாடு செய்யப்படும் செயற்பாடுகளில் மாத்திரம் தொற்று பரவல் தீவிரமடைகின்றதா” என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு, பலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“ நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் காரணமாகவே முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழியுறுத்தினேன். வேறு காரணங்களுக்காக குறிப்பிடவில்லை” என்று குறிப்பிட்டாா்.