தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதியால் மக்களுக்கு அச்சுறுத்தல் – நாளுமன்றில் கருத்து

0 155

நாடு பூராகவும் இருக்கும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சென்றதில்லை என்றும் அந்த வீடுகளை சகாக்கள் மாத்திரமே அனுபவித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தாா்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வீடுகள் நாட்டில் ஏழு, எட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

மிரிஹானையில் அமைந்துள்ள அவரின் சொந்த வீட்டில் ஜனாதிபதி தங்கியிருப்பது நல்ல விடயமாக இருந்தாலும், அவர் தனது ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்வதையே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

மிரிஹானையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் ஜனாதிபதி தங்கியிருப்பது அருகிலுள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறினாா்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இராண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ஜனாதிபதி அந்த இடத்தில் இருப்பதால் அந்த சுற்றுவட்டாரத்தை தொடர்ச்சியாக பொலிஸ் பரிசோதனைகள் இடம்பெறுவதால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் சிறியளவான வியாபார நடவடிக்கைகளுக்கும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினாா்.

Leave A Reply

Your email address will not be published.