Developed by - Tamilosai
பங்காளிக் கட்சிகளின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எனவே தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளைப் புறக்கணிக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் வெட்கமில்லாமல் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் நிலைய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளிக்கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார்.
பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி புறக்கணிப்பது இதுவொன்றும் புதிதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.