Developed by - Tamilosai
இன்று (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய் மட்டுமே வரியாகப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட அரச செலவினங்கள் ஜனவரி 27 ஆம் திகதி வரையில் ரூ. 367.8 பில்லியன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.