Developed by - Tamilosai
எதிர்வரும் தினங்களில் அனைத்து ரக அரிசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா முதல் 50 வரை அதிகரிக்கக் கூடும். எனவே, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விரைவாக அறிவிக்க வேண்டும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் எதிர்வரும் தினங்களில் அரிசிக்கான கேள்வி அதிகரிக்கும்.
உரப்பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிடின் எதிர்வரும் ஜனவரி மாத்திற்குள் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
உரப் பிரச்சினை காரணமாக பெரும்போகத்தில் 50 சதவீதமான நெல் விளைச்சல் மட்டுமே கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.