தமிழ் ஓசை
தமிழ் ஓசை

செர்ரி கால்பந்து லீக்: ஜூவெண்டஸ் அணி வெற்றி!

0 67

 இத்தாலியின் செர்ரி கால்பந்து லீக் தொடரின் எட்டாவது கட்டப் போட்டியில், ஜூவெண்டஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

பழமையான இத்தொடரில், தற்போது எட்டாவது கட்டப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் ஜூவெண்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் ரோமா அணியும் மோதின.
இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் ஜூவெண்டஸ் அணி சார்பில், மொய்ஸ் கீஹன் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் ஜூவெண்டஸ் அணி, 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் ரோமா அணி 15 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.