Developed by - Tamilosai
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
நாட்டு மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் வகையிலான இவ்வாறான செய்திகளை முழுமையாகவே நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவிக்கின்றார்.
