தமிழ் ஓசை
தமிழ் ஓசை

செய்திவாசிப்பாளர் கண்மணி – சின்னத்திரை நடிகர் நவீன் திருமணம் இன்று நடைப்பெற்றது.

0 116

சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே செய்திவாசிப்பாளர்களும் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறியவர் கண்மணி சேகர்.

காவிரி டிவி, மாலைமுரசு, ஜெயா டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது சன் டிவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய  ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்த நவீனும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நவீன். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண்மணியுடன் திருமணம் என்ற தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார். அதற்குள் இணையத்தில் இது காதல் திருமணம் என்ற தகவல் பரவியது. ஆனால் இது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று நவீனும் கண்மணியும் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் நவீன் – கண்மணி திருமணம் நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றது.  நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.அதில் சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நவீன் – கண்மணி ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

தமிழோசை ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.