தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சென்னையில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி

0 12

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் 5,000 கூடுதல் இருக்கைகளுடன் புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டினார். புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.டோனி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று திறக்கப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்கான டிக்கெட் இன்று வழங்கப்பட உள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.