தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சூடானில் இராணுவச் சதித்திட்டம்: பிரதமர் வீட்டுக்காவலில் வைப்பு: அமைச்சர்கள் கைது

0 274

சூடானின் அமைச்சரவையிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களும், ஏராளமான அரசாங்கச் சார்பு கட்சித் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை ஒரு வெளிப்படையான இராணுவச் சதித்திட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், இராணுவச் சதிப்புரட்சி எனத் தோன்றும் வகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் குடும்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இன்று திங்கள்கிழமை அதிகாலை ஒரு இராணுவப் படை அப்தல்லா ஹம்டோக்கின் இல்லத்தை தாக்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஆளும் இறையாண்மை சபையின் ஒரு சிவிலியன் உறுப்பினரும் கைது செய்யப்பட்டதாக அல்-ஹதாத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் கட்சித் தலைவர்களும், கூடுதல் அரசாங்க அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சூடானின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஹம்டாக், 2019 ஓகஸ்ட்டில் நாட்டின் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அவர் நீண்டகால சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரை பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தினார்.

அடுத்த ஆண்டு இறுதியில் நாடு தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் இராணுவச் சதிப்புரட்சி தற்சமயம் அரங்கேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.