தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுவையான தயிர் சிக்கன் கிரேவி

0 34

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ
எண்ணெய்/நெய் – 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 1 பெரிய துண்டு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கையளவு

செய்முறை:

  • கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். இதையும் படியுங்கள்: மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் கட்லெட் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
  • பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
  • பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.
Leave A Reply

Your email address will not be published.