தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுழல் வெப் சீரிஸுக்கு குவியும் பாராட்டுகள்

0 48

விக்ரம் – வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கதை உருவாக்கத்தில் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர்.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் இந்த இணைய தொடரில் நடித்துள்ளனர்.

தமிழில் உருவாக்கப்பட்டஇந்த வெப் தொடர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அற்புதமான த்ரில்லர் வெப் சீரிஸாக சுழல் அமைந்துள்ளது. இது பார்ப்போரை மெய்மறக்க செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. கதிர், ஸ்ரீரேயாரெட்டி, பார்த்திபன், ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். மறக்க முடியாத படைப்பை புஷ்கர் – காயத்ரி அளித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், ‘சுழல் விஷுவல் ட்ரீட்டடாக அமைந்துள்ளது. வெப் சீரிஸ்களில் புதிய ட்ரெண்டை சுழல் ஏற்படுத்தியுள்ளது. அக்கா காயத்ரி, அண்ணன் புஷ்கருக்கு வாழ்த்துக்கள். விசாரணை,ரொமான்ஸ், சஸ்பென்ஸ், சென்டிமென்டில் அசத்திய சர்க்கரை கேரக்டரில் நடித்த கதிர், ரெஜினாவாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, நந்தினி ஐஷ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு திரைப் பிரபலங்களும் இந்த வெப் சீரிஸை பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.