Developed by - Tamilosai
இன்று (06) முதல் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று சிறு பிள்ளைகள் உட்பட பலர் உயிரிழந்ததையடுத்து, எல்லாவல நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்க வெல்லவாய பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த எல்லாவல நீர்வீழ்ச்சி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது அருவியை சுற்றி பாதுகாப்பு கயிறுகள் அமைக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுமாறு வெல்லவாய பிராந்திய சுற்றாடல் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.