Developed by - Tamilosai
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாதத்தில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹோட்டல் சேவையாளர்கள் நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 82, 322 ஆக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 30 , 207 ஆக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது