தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயம்

0 212

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது 7,500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் குறித்த காப்புறுதியானது 5,000 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

நாட்டின் சுற்றுலா வலயத்திற்கு அருகில் பிரத்தியேகமானதொரு காவல்துறை பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை மற்றும் உனவட்டுன பகுதியில் அதற்கான கட்டட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் 82, 327 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.