தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பேராதனை பல்கலை பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

0 487

நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டியை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று வடிவமைத்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி சிறப்பு கண்காட்சி – 2022 இல் இந்த முச்சக்கரவண்டியானது ஒன்றிணைந்த நீர் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (23) முதன்முதலில் வெளியிடப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்க இந்த முச்சக்கர வண்டியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

E சக்கர வாகனம் என அழைக்கப்படும் இந்த மின்சார முச்சக்கர வண்டியானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீற்றர் வரை பயணிக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தும் போது, ​​நாட்டில் உள்ள இரண்டு மில்லியன் முச்சக்கர வண்டிகளை மின்சார ஓட்டத்திற்கு மாற்ற முடியும் என பேராசிரியர் தெரிவித்தார்.

இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், முச்சக்கரவண்டியின் உரிமையாளர் இதற்குப் பயன்படுத்தப்பட்ட பற்றறியை சார்ஜ் செய்யத் தேவையில்லை, மேலும் பயன்படுத்தப்பட்ட பற்றறியை வெற்று எரிவாயு சிலிண்டரைப் போல நாடு முழுவதும் உள்ள நிறுவல் மையங்களுக்கு வழங்க முடியும்.

அப்போது முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அதன் மின்சாரத்துக்காக மட்டும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் கூறினார். தனியார் நிறுவனம் ஒன்று தற்போது இந்த திட்டத்தை முன்னெடுக்க முன்வந்துள்ளதாகவும் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்க மேலும் தெரிவித்தார். 

Leave A Reply

Your email address will not be published.