Developed by - Tamilosai
பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர்.
இது தொடர்பில் பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக் ட்விட்டர் பதிவொன்றினை மேற்கொள்ளும் போது,

இதுதொடர்பில் சர்ச்சை ஒன்று புலம்பெயர் சூழலில் எழுந்தது.
தமிழ் மக்களுடையது உரிமை சார்ந்த பிரச்சனை, அதுபோன்று தமிழர்கள் ஒரு தேசிய இனம் ஆகவே அவர்கள் சிறுபான்மையினர் அல்ல. முழுபிரச்சனையையும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது ஜெனிவா விடயமாகவோ பார்த்துக்கொள்ளாது தேசிய இனத்தின் பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும் என்று.
தற்போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் ட்விட்டரில் தெரிவித்திருப்பது மீண்டும் சர்ச்சயை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் வடகிழக்கு தமிழர்களின் உண்மை நிலை குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் அறியாதது போல் தெரிகிறது. 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் என்பதை அங்கீகரித்துள்ளது. அவர்கள் தங்கள் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்.

