Developed by - Tamilosai
ஐ.சி.சி. ரி – 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் சுப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இந்தப் போட்டி இன்று ஷேக் சயீத் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் ஏடன் மார்க்ரம் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, 119 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 34 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.