தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுன்னாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு

0 163

சுன்னாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே  நேற்று வியாழக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உறவுப்பகை காரணமாக, அயலில் உள்ளவரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்கான அம்பனை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.