தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற சபை இணக்கம்

0 93

 பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரை நியமிக்க நாடாளுமன்ற சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றியதுடன் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும் சுங்கப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.