Developed by - Tamilosai
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
குறித்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி அணி கலந்துக் கொள்ளவில்லை.
மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராக இல்லாதபோது ஆடம்பரத்திற்காக செலவிடப்படும் நிதியை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது