Developed by - Tamilosai
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலர் சுநத்திர தினத்தன்று விடுதலை செய்யப்படலாம் என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “நான் சிறையில் இருந்த போது விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்த மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் என்னை சந்தித்து பேசியிருந்தனர்.அவர்கள் தங்களின் வாழ்க்கை கதையினை என்னிடம் கூறியுள்ளனர். அவர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் இந்த நிலைக்கு ஆளாவதற்கு என்ன காரணம் என்பவற்றை என்னிடம் சொன்னார்கள்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடமும் நாம் வேண்டுகோளொன்றை முன்வைத்தோம் . தற்போது யுத்தம் முடிந்துவிட்டது .இந்த காயத்தை மீண்டும் மீண்டும் கிளற வேண்டாம். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கட்டாயம் விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஐரோப்பிய, மேற்கத்தேய நாடுகளிகள் தமிழ் பிரிவினைவாத குழுக்கள் இதை காரணமாகக்கொண்டு எம் நாட்டிற்கு எதிராக செயற்படுகின்றார்கள். ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி வட மாகாணத்திற்கு பயணம் செய்திருந்தோம்.