தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல்

0 446

ரீலங்கா சுதந்திர கட்சி உத்ததேச தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மத்திய குழுவில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு குறித்து எதிர்வரும் 8 ஆம் திகதி சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவருடனும் , நேற்று சு.க. தலைமையகத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிவது குறித்தும் , தொகுதி மட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.