தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுதந்திரக்கட்சியை உடன் வெளியேற்றுங்கள்.

0 188

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் , வெளியேற்றுவதற்கு முன்னர் வெளியேறுவதே நல்லது.

இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக்கட்சி அல்ல. அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே அங்குள்ளனர். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம் இழைக்கலாம். எனவே, பாய்ந்து செல்வதற்கு முன்னர் வெளியேற்றுவதே நல்லது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவர் பின்னாலும் செல்லாது, சுதந்திரக்கட்சி தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.