Developed by - Tamilosai
அரசையும் , அதன் கொள்கையையும் விமர்சித்ததாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேஜயந்த நீக்கப்பட்டுள்ளார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
” நாம் அணியாக இணைந்து செயற்படும்போது ஏதேனும் பிரச்சினை இருப்பின் அந்த அணிக்குள்தான் கதைக்க வேண்டும். அதைவிடுத்து வெளியில் சென்று விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல. கூட்டு பொறுப்பு என்றால் என்னவென்று புரியாவிட்டால் பதவிகளை வகித்து பயன் இல்லை.
சுசில் பிரேமஜயந்த அரசையும், கொள்கையையும், விவசாய அமைச்சையும் விமர்சித்துள்ளார். அதனால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.” என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
அதேவேளை, அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்ற கவலையில்தான் சுசில் பிரேமஜயந்த விமர்சனங்களை முன்வைத்து, டபள் கேம் ஆடினார். 2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி பக்கம் தாவியவரே அவர்.” – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் குறிப்பிட்டார்.