Developed by - Tamilosai
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையிலான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனூடாக கேட்டுக் கொண்டுள்ளார்.
இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய,
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புக்களுக்காக அந்த வகுப்புக்கள் நடைபெறும் இடத்தின் கொள்ளளவில் 50 வீதம் வரை அனுமதிக்கப்படுகிறது.
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.