Developed by - Tamilosai
பதுளை பிரதான அரச வைத்தியசாலையில் 15 வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 55 சுகாதார ஊழியர்களுககு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, அரச வைத்திய சங்கத்தின் பதுளை மாவட்டத் தலைவரும் வைத்திய நிபுனருமான பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.
மேற்படி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளி நோயாளர் பிரிவு, நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெரும் பிரிவு ஆகியவற்றிலுள்ளவர்களான 15 வைத்தியர்கள் உள்ளிட்டு 55 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் பலர் தத்தம் வீடுகளிலேயேயும், சிலர் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பிட்ட நோய்த் தொற்றுக்கிலக்கானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலரும் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து வருவதாகவும், வைத்திய நிபுனர் பாலித்த ராஜபக்ச மேலும் கூறினார்.
கோவிட் 19 தொற்று மரணங்களும், தொற்றாளர்களும் பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்து வருவதால், கோவிட் 19 சுகாதார வழிமுறைகளை முறையாகவும், கிரமமாகவும் பின்பற்றுமாறும், பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காய்ச்சல், இருமல், தொண்ட நோய், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அவ்வப் பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்களை நாடி, உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும்படி, வைத்திய நிபுனர் பாலித்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.