Developed by - Tamilosai
நாட்டில் வழமையான செயற்பாடுகளைப் படிப்படியாக முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில், மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் தினமும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.