தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனா ஏவுகணைகளை வீசி போர் பயிற்சி

0 19

சீனா வீசிய ஒன்பது ஏவுகணைகளில் ஐந்து ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபோ கிஷி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சீனாவிற்கும் தாய்வானுக்கும் இடையில் போர்ச் சூழ்நிலைகள் ஏற்பட்ட வண்ணம் காணப்படுகிறது.

இதேவேளை, தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கின்றதால், தாய்வானைச் சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு போர் பயிற்சியை தொடங்கியது.

இந்தப் போர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. தாய்வான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் சீனா அதிநவீன ‘டாங்பெங்’ ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இந்நிலையில், சீனா நாட்டின் ஏவுகணைகள் ஜப்பான் நாட்டிற்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இது ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.