தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீரற்ற காலநிலை நீடிப்பு – தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

0 208

 நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்ட  தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை மீறிச் சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.