Developed by - Tamilosai
வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
சேத விபரங்களில் அதிக காற்று காரணமாக இன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 02 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், ஜே 04 கிராம சேவகர் பிரிவில் ஒருவரும் பாதிக்கப்பட்டார்.
அத்துடன் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 427 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன் சங்கானை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே 171 கிராம சேவகர் பிரிவில் நேற்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.